மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

போனும் போராட்டமும்

நகுலா சிவநாதன்

போனும் போராட்டமும்

வானும் மண்ணும் வளமாய் இருக்க
வையத்து இயற்கை வரமே பேசும்
நானும் நீயும் நயமோடு வாழ்ந்திட
நல்ல துணையாய் இருந்திட வேண்டும்

போனும் பொழுதும் போராட்டமின்று
போக்கிடமின்றி அடக்கமும் இதற்குள்
நாளும் நாளிகையும் நயமாகச் செல்ல
வாழும் காலம் வையத்தில் போராட்டம்

கற்ற கல்வி பயன்தரவே கணணி வாழ்வு
கடுகதியாய் செல்ல கடுகடுப்பு
உற்றதுணை பேசிடவே உதவும் போன்
உளமாரப் போராட்டம் இதனால் இன்று

காலை மாலை பேசி விரையும் பொழுது
கரையும் காலம் காசில் இன்று
ஊரை உலுப்பும் உள்ளுரக் காதல்
உண்மையாய் வந்தது போனால் அல்லவோ

நகுலா சிவநாதன் 1794

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் முதன் முதலாக முயற்சி பதிலுக்குப்பதில் பயிற்சி எதிலும் உயர்ச்சி பெறப் போட்டி உயிரானந்தமே ஐந்தோ அறியாப் பருவம் பதினைந்து...

Continue reading