உயிரான உறவு 86
உயிரான உறவே…….
போனும் போராட்டமும்
கவி 755
போனும் போராட்டமும்
நாகரீக உலகத்தின் நாயகனாய் இதுவே
ஆசைதீர பாவிக்கும் கருவியாய் இதுவே
அடிமையாக்கி மனிதரை ஆளுவதும் இதுவே
குடித்திடும் மதுவைவிட போதைதரும் இதுவே
ஆக்கங்கள் தேங்கியும் கிடப்பது இதனாலே
தூக்கத்தின் அளவும் குறைந்துபோனதும் இதனாலே
உரையாடும் திறமை பாதிப்படைந்ததும் இதனாலே
அரைவாசி நாளும் இரையாகிப்போவதும் இதனாலே
குண்டாகி உடலும் பருமனானது எதனாலே
உண்டுவிட்டு கைபேசியுடன் விளையாடுவதால் அதனாலே
குடும்ப உறுப்பினர்கள் அந்நியர்களாகியதும் எதனாலே
உடும்புப்பிடி பிடிச்ச கைத்தொலைபேசி அதனாலே
படிப்பை பாதியில் பாழாக்கிவிடும் சாதனம்
அடித்து அந்தவிடத்தில் அமர்த்திவிடும் நூதனம்
உள்ளங்கையில் உலகம் இருப்பதாக பெருமை
உள்ளபடி சொல்லப்போனால் ஆறறிவு அடிமை
கடிகாரம் கடிதம் எல்லாமும் போச்சு
முடிவுரை நாட்காட்டிக்கும் கமராக்கும் எழுதியாச்சு
அலாரம் வைக்கிற மணிக்கூடும் போச்சு
உலாவந்த காற்றலையும் இதற்குள் முடங்கியாச்சு
இன்னும் என்னென்னதான் போனால் போச்சு
கண்ணின் ஒளியும் மெல்லனவே மங்கிப்போச்சு
வேண்டினாலும் நீளாத ஆயுளும் போச்சு
நோண்டுவதே போனை வாழ்க்கையில் பிரதானமாயாச்சு
ஜெயம்
09-01-2025
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments
-
By
- 0 comments