மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 263
30/04/2024 செவ்வாய்
“அழகு”
————
காலை இளம் கதிரோனும்,
கனிவு தருமிள வேனிலும்,
மாலை ஒளிதரு மதியவளும்,
மண்ணின் மாண்பு கூறிடுமே!

காவும், கவினுறு சோலையும்,
கடலது தருமலை யோசையும்,
மேவிடு நதிகளும், மலைகளும்,
மேதினிக் கழகு சேர்த்திடுமே!

பூமகள், நனிதரு ரோஜாவும்,
பூங்குழல் விரும்பிடும் மல்லியும்,
நாமகள் நயந்திடும் தாமரையும்,
நானிலம் கொண்ட நல்லழகே!

கொஞ்சு மொழி குயிலதுவும்,
கோவை இதழ் அஞ்சுகமும்,
மஞ்ஞை என்னும் மயிலதுவும்,
மண்ணின் மகத்துவ எழிலாமே!

துள்ளும் புள்ளி மானினமும்,
தொங்கிப் பாயும் முயலினமும்,
கொள்ளை அழகு சேர்த்திடுமே!
குவலயம் அழகு கொண்டிடுமே!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading