வரமாகும் வாய்ப்புகளே 87

வரமாகும் வாய்ப்புகளே 87 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-02-2026 வரமாகும் வாய்ப்புகளே -இந்த வாய்ப்பெனும் விதையைப் பயிராக்கி வியர்வையை...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 268
04/06/2024 செவ்வாய்
“பெண்ணே!”
பேதை என்றிடும் மென்னவளே!
பெதும்பை என்ற சின்னவளே!
வாதை எல்லாம் சுமந்தவளே!
வெல்வாய் நீ உலகினையே!

கள்ளிப்பால் நஞ்சு ஊட்டியவர்,
கைலாயம் போய் சேர்ந்திட்டார்!
மன்னிப்பாய்,மற்றவர் மாறிட்டார்!
மாசுறு தவறை உணர்ந்திட்டார்!

உலகு போற்றுது உந்தனையே!
உண்மைப் பேறு பெற்றனையே!
பலமுடன் பலவும் கற்றனையே!
பாரில் புதுமை படைத்தனையே!

ஆகாய வெளியில் பறக்கிறாய்!
ஆணாய் தொழில் பார்க்கிறாய்!
நீயாக நிறுவனம் சமைக்கிறாய்!
நிலவுக்கும் நீயும் போகிறாய்!

ஆட்சியும் உன்னால் உருவாச்சு!
அரசு நடாத்துவதும் திருவாச்சு!
மீட்சியும் உலகினில் மேலாச்சு!
மின்னென உன்புகழ் பதிவாச்சு!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading