02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 229
செவ்வாய் 18/07/2023
“இயற்கை”
—————
இயற்கை என்னும் இனியவள்
இங்கும் அங்கும் உறைபவள்!
செயற்கை யென்பதன் எதிரவள்
சேவிக்கும் தெய்வம் ஆனவள்!
“வைகறை” யெனும் பெண்ணவள்
வர்ணம் கொண்ட அன்னவள்!
கைவளை குலுங்க காண்பவள்
“காலை”யின் தங்கை ஆனவள்!
“வசந்தம்” என்னும் மென்னவள்
வாலிப வயதின் கண்ணவள்!
நிசந்தான் வாழ்வென நினைத்தவள்
நீலி “கோடை”யால் அழிந்தவள்!
“தென்றல்” என்னும் தேவியவள்
தேனமு துண்னும் பாவியவள்!
முன்றல் மல்லியை முகர்ந்தவள்
மூத்தவள் “வாடை’யின் இளையவள்!
ஆழியின் மேனியில் உறைபவள்
“அலை”யெனும் நாமம் உடையவள்!
காளியாய் மாறும் குணத்தவள்
கண்களைப் பனிக்க வைப்பவள்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
07
Apr
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நன்றி..
மகத்துவமானது
மதித்திறன் நிறைந்தது
ஆற்றலின் விழிப்பிது
உணர்விலே கலந்தது
உயர்வாய் மலர்வது
செப்பிடும் வார்த்தையில்
செம்மை நிறைக்கும்
மறவாது வாழ்தலே...
06
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
இது இதயத்தின் ஈர்ப்பு
அது உதயத்தின் உயிர்ப்பு
எதுவாயினும் ஒரு செயல்
செய்ததற்கு நன்றி கூறல்
ஆதாயமின்றிய...
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...