மறதி

வசந்தா ஜெகதீசன்
மறதி..
மனதினை ஆற்றும்
மாறாத துயர்களை விரட்டும்
மறதியே மகத்துவம்

சிலகணம் சிக்கலே
தேடலை விளைவாக்கும்
விவாதங்கள் உருவாகும்
முதுமையும் வாய்ப்பாகும்
முற்றாக மறக்க வைக்கும்

மறதியின் மகத்துவம்
மனிதத்தின் நியதி
தக்கத் துணையாகி
தாங்கியே தொடரும்
வாழ்வின் வரம்பில் மறதியும்
ஓர் எல்லை
மறக்கத் தகுமா
தருகின்ற தொல்லை!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading