மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு (757)

செல்வி நித்தியானந்தன்
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு

சுத்தமான காற்று சுகமான வாழ்வு
சத்துநிறை ஒளியும் உலவும் நிறைவு
இலவச மழை இணைந்த சேர்வு
இயற்கை தரும் கொடையில் நிறைவு

நாடுகள் போட்டி மாசும் உயர்வு
வீடுகள் தூசு விரைவாய் வரவு
காடுகள் அழிப்பு சாம்பலாய் தரிப்பு
நலமும் இன்றி மருந்தும் விரைவு

வளமான வாழ்வு ஆரோக்கிய உறுதி
பலமான உணவு நம்பிக்கையில் குருதி
ஒவ்வாமை விலக்கி வாழனும் இறுதி
ஒன்றே உலகு ஒழியனும்மாசு அறுதி

பன்னாட்டு நாளாம் ஏப்பிரல் ஏழாம்
பாதுகாத்து நாமும் வாழவும் பழகியும்
சுற்றுச் சூழலை சுத்தமாய் வைத்தும்
சுகாதாரமாய் வாழ்ந்து உடல்நலத்தை பேணணும்

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading