மாறியதே வாழ்க்கை 92

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026

மாறியதே வாழ்க்கை – என்று
மனமும் குமுறுதே இன்று
கடல் அலையால் கரைந்த
கட்டுமாடி மணல் கோபுரமாய்

கனவுகளும் ஆசைகளும் கரைந்து
கனமான காலம் நகர்ந்து
உயிரான உறவுகள் பலவும்
ஊரோடும் தெருவோடும் அழிந்தும்

பைகளில் பணம் நிறைந்தாலும்
பல ஏக்கங்கள் குறையாமல்
கைகளில் தொலைபேசி அழைக்க
கண்களும் தேடுதே தோழி

மாறியதே வாழ்க்கை செப்பி
மனம் விடியலைத் தேடி
நம்பிக்கையோடு நகர்ந்து செல்ல
நன்மை கிடைக்கும் நமக்கே.

Jeba Sri
Author: Jeba Sri

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading