மாற்றம் ஒன்றே

இரா.விஜயகௌரி
மாற்றம் ஒன்றே மாறாதது
மகிழ்வுடன் ஏற்றலும்
எதிர்வினை ஆற்றலும்
வினைத்திறன் விளைச்சலாய்
மடை திறந்திட மொழிதலும்
காலச்சக்கர சுழற்சியின் தொடுப்பில்
ஆற்றலை அறிவினை
சீர்பட செப்பனிட்டே கொடுத்தலும்
வெற்றியின் மந்திரம்
விளை பயிரதன் தந்திரம்

வீழ்ந்தவன் எழுந்தால் -அவன்
வென்றிட உழைப்பான்
தடைகளைத் தகர்த்து
தனித்துவ உழைப்பினில்
சாதனைப்படையலை நாளும்
விருந்தெனக் கொடுப்பான்
உலகினை உணர்ந்தே
உயர்ந்திட தொடர்வான்

மாற்றம் ஒன்றே- மாறா நிலையினில்
மகிழ்வொடு ஏற்றலும்
முனைப்பொடு இழைதலிம்
வென்றவர் சுவடுகள் நிதம்
உரைத்தெழும் பதிவுகள்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading