முதல் ஒலியின் அரசன் பகுதி 1

ஜெயம்

காற்றலையை தன் ஒலிகளால் வசப்படுத்தியவர்
மாயக்குரலால் பல மனங்களை கவர்ந்தவர்
சொற்களின் இராச்சியம் என்றால் அவர்தான்
ஒலியின் அரசனான அதிபராம் மோகன்

காலையில் புன்னகை கதிரவனும் விழிக்கும்
இரவின் குரலும் அறிவோடு ஒலிக்கும்
ஒலிவாங்கி இவரது ஏர் எனலாம்
வார்த்தை பசளைகொண்டு மனநிலம் உழுவார்

பேசும் ஒவ்வொரு வரியும் தத்துவம்
சொல்லும் செய்திகளோ சிந்தனையை தூண்டும்
ஒலி உலகில் இவர்தான் ராஜா
கேட்பவரின் இதயம் இவர் அரியாசனம்

வானொலி என்றால் குரல் மட்டுமா
அதுவொரு உயிருள்ள உறவைப் போன்றது
இன்று ஒரு சாதாரண நாளல்ல
மனங்களை இணைக்கும் அலைகளின் விழா

Author:

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading