முயற்சியே பலம் முனைப்பே திடம்….

வசந்தா ஜெகதீசன்
முயற்சியெனும் முதலீடு
முன்னேற்ற தொழிற்பாடு
அறிவெனும் ஒளியேற்றி
ஆட்சி செய்யும் அச்சாணி
தேடலிலே திசை மாறும்
தினம் தினமாய் வலுவாகும்
உழைப்பாற்றல் உளியாகும்
செதுக்கலே செம்மையிடும்
செயல்களே தெளிவாகும்
வாய்ப்புகள் வரமாகும்
வார்ப்புகள் பலநூறாய்
எண்ணமுறு திடலில்
ஏற்றமுறு காரியமே
வெற்றிக்கு அடிகோலும்
முனைப்போடு முயலுதலே
திடமாகி தேர்வாகும்
திசையெங்கும் ஒளிர்வாகும்
விதைப்பின் விருட்சமே இழப்பின் உச்சநிலை
இயல்பின் வாழ்க்கை முறை!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading