முயற்சியே பலம் முனைப்பே திடம்❤️❤️❤️

வியாழன் கவி-2341
முயற்சியே பலம்
முனைப்பே திடம்..!!

முயற்சி எனும் பலமது தீண்ட
முன்னேற்றம் கரமதில் சேரும்
உரமென உற்சாகம் தந்தெமை
ஊன்று கோலில்லா வாழ்வும்
நின்று நிறைந்து வாழ்ந்திட
பலமும் உறவுப்பாலமுமாகி
தேடலும் ஆளுமையும் விதைத்த
பா முகமே பணி நினதாய்
ஆண்டுகள் மூ ஏழு முழுதாயின
நன்றி எனும் சிறு வார்த்தை
சிந்திவிட்டு நகர்ந்திடலாகா
எந்தையும் வையமும் மகிழ
சிந்தை நிறை செல்வமாய் நீ
ஆற்றும் பணிக்கு வாழ்த்திசையும்
ஈற்றென்று நின்றுவிடா இறுமாப்பு
மூச்சென்று நீ சிகரம் தொட்டுவிடு
வாழ்த்துமழை பொழிகிறேன்
உன்னால் உருவானவள் நான்..!!
சிவதர்சனி இரா
21/5/2026

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading