முற்றத்து நிலவு

ராணி சம்பந்தர்

சுடுகிற அளவிற்கு எங்கும்
படுகிற ஒளி பெரிதாகியே
கலங்கிய விழிகளை நியோ
தொட்டுச் செல்கின்றாய்

கண் இரண்டும் கூசக் கூச
காவாலிக் கையோ பட்டும்
கசங்காது பிரகாசித்ததே
உன் பரிமாண வளர்ச்சியது
பிரமாண்ட குளிர்ச்சியிலோ

மாலையில் புத்தம்புது சிவப்புக்
கூறைப் புடவை உடுத்தியே நீ வரும் அழகு கொள்ளைஅழகே
நீ மெழுகிக் குளித்து தலை குனிந்துவெட்கமுடன் வெளியே
வர சிவந்ததோ செவ்வானமும்

எது எப்படியோ உன் திருமுகம்
கண்ட சந்தோஷத்தில் ஒளிரக்
என் அகமனமும் பூத்துக் குலுங்க உனைப் பிடிக்க நானோ எட்டி எட்டி நடக்க
நீயோ அகப்படாது எட்டி
எட்டிப் போகின்றாயே .

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading