மூக்குத்தி..

வியாழன் கவி-2371

மூக்குத்தி..!!

எடுப்பான மூக்கின் மேல்
துடுக்காய் அமர்ந்த மின்னி
தடுப்பாள் நாவூறு தன்னை
நெடு நாள் உறவைச் சொல்லி..

அடுக்கிய கல்லுக் குவியல்
அழகாய் முத்தும் சிரிக்கும்
வைரத்தில் பதிக்க நினைக்கும்
வசதி இருப்பின் கனவு பலிக்கும்..

ஆச்சி கால அழகியல் நீளும்
பேர்த்தி வாழ்வில் உரசி வெல்லும்
அணிகளில் ஒன்றாய் உறவு கொஞ்சும்
அடடா இப்போ இதற்கு ஏது பஞ்சம்..
சிவதர்சனி இரா
13/8/2026

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading