மூப்பு வந்தாலே..

வியாழன் கவி 2217!!
மூப்பு வந்தாலே…
முனகலும் மூச்சிரைப்பும்
முடியாமையும் முயலாமையும்
நடுக்கமும் நாடிச் சோர்வும்
தடுக்க முடியா நோயும்
கூடவே வந்துவிடுமே..

நரையும் திரையும்
கரை காணா சோர்வும்
விடுப்பும் கடுப்பும்
விழி மங்கிய பார்வையும்
விருப்பமில்லா பசியும்
கூடவே வந்துவிடுமே..

புறு புறு பேச்சு
புரிபடாத் துயரமும்
மூலையில் முடக்கம்
முந்திவந்து சேரும்
முன் அனுபவம் இன்றியே
சாவை நாட வைக்கும்..
சிவதர்சனி இராகவன்
1/10/2025

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading