மூப்பு வந்தாலே.

23/ மூப்பு வந்தாலே. விண்ணவன் – குமுழமுனை..
*~***~*
முந்திம் வாழ்ந்த
வாழ்க்கையோ
அது எங்கே?

அறியா வயதில்
ஒன்றாய் ஓடி,ஆடி
எவ்வித கவலையும்,
பொறுப்பும் இன்றியே

முகத்தினிலே புன்
சிரிப்புடனே வாழ்ந்தோமே

ஆனால் இன்றோ
எத்தனை யோசனைகள் மனதிலே

எத்தனை பொறுப்புக்கள் தலையிலே
தலை நிமிரவோ முடியாத அளவிற்கு!!
கண்முன் வந்து போகும் அவ்
கடந்த கால நினைவுகளோ
நெஞ்சில் மணம் வீசுகின்றனவே

மூப்பு வந்தாலே
முகத்தினிலே சிரிப்பு
மறந்து விடுகிறதே…
*~***~*
விண்ணவன் – குமுழமுனை

Author: