மூப்பு வந்தாலே…..

நகுலா சிவநாதன்

மூப்பு வந்தாலே…..

மூப்பு வந்தாலே முடக்கம் காணும்
காப்பும் இல்லை காப்புறுதியுமில்லை
தோப்பும் வராது தோள்நின்றவர் விலகுவர்
யாதும் முடிவற்ற அனுபவக்கீற்றாகும்

முதுமை அணைக்கும் மூப்பு
இளமையை நினைக்கும் இதயம்
வதுவை வாழ்வில் வந்தால் புரியும்
வகையாய் தடியைத்தேடும் தலைவிதி

மறதி வரும் மயக்கமும் வந்திடும்
உறுதியிங்கு நிலைகுலைந்து தாண்டவமாடும்
அனுபவம் காட்டும் அவதியும் கொள்ளும்
அனுதினம் வசையும் பாடும்

மூப்பு வந்தாலும் இளமையை நினை
இதயத்தில் உறுதியை பலமாக்கு
தாக்கும் நோயை எதிர்த்து நிற்க
தக்கபடி உடற்பயிற்சி செய்து பார்
தனித்துவ இளமை உனக்குள் சதிராடும்

நகுலா சிவநாதன் 1823

Author: