மொழியன்னை..

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2229!!

மொழியன்னை!!

மூச்சாகிப் பேச்சாகி
முன்னிற்கச் செய்பவள்
செம்மொழி தானாகி
சேர்த்தெம்மை அணைப்பவள்
இலக்கண வளம் சேர்த்து
இயங்கிட வைப்பவள்
தலைக்கனம் தானின்றித்
தவழ்ந்து மகிழ்பவள்..!!

முகவரி தானென்பாள்
முதல் வரி நின்றானாள்
ழகரத்தை இணைத்தே
அழகினை அணிந்தவள்
மூத்த மொழி தானாய்
முன்வந்தே ஆள்பவள்
வரியும் ஒலியும் சேர
வாய்த்த பெருமையிவள்..!!
சிவதர்சனி இராகவன்
22/10/2025

Author:

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading