யார்நான் ( 687) 07.11.2024

Selvi Nithuanandan

யார்நான்

தெருவிலே அழகாய்
தேன்சுவைக்கும் நீயாய்
தருவெனப் பெயராய்
தரணியில் நீயுமாய்

பிணிக்கும் மருந்தாய்
பிடிப்போர்க்கு விருந்தாய்
பிரத்தியேக நிறமுமாய்
பிரபல விற்பனையாய்

வறட்சிநில சாகுபடி
வருமானம் அத்துபடி
விற்றமீனும் நிறைந்தபடி
விவசாய விளைச்சலாய்

உணவிலும் சேர்வையாய்
உண்ணக் கனியாய்
புற்றுநோய்கு சவலாய்
புவனத்தில் நீயானாய்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading