தேடும் உறவுகளே…
பேரெழில் நாடு
ரஜனி அன்ரன்
“ தமிழர் கலையாம் தமிழிசை “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 23.02.2023
தமிழுக்குப் பெருமை சேர்ப்பது தமிழிசை
தமிழரின் பாரம்பரிய இசை தமிழிசை
இயல் இசை நாடகமாகி முத்தமிழாய்
இசையும் கூத்தும் இணைந்து இசைத்தமிழாய்
இரண்டறக் கலந்தது வாழ்வோடு தமிழிசை !
ஆதியான தமிழிசைக்கு ஆதாரமாய்
இலக்கணம் வகுத்தது அகத்தியம்
தொன்மைக்கு சான்றானது தொல்காப்பியம்
புத்துயிரானது பக்திப்பனுவல்கள் பாசுரங்கள்
கலங்கரை விளக்கானது சிலப்பதிகாரம்
மறுமலர்ச்சியைச் செய்தாரே பாரதியாரும் !
இசையைத் தொழிலாக்கி
தொழிலுக்கு இசைக் கருவியானது பறை
பொழுதை இன்பமாய்ப் போக்க
யாழை இசைத்து மக்கள் மகிழ
தமிழிசைக்கு இலக்கணம் தந்தது யாழ்நூல் !
முத்தமிழின் நடுநாயகமாம் தமிழிசை
தாலாட்டோடு தொடங்கி நீராட்டு வரை
தமிழர் வாழ்வோடு பயணித்து
தமிழிசையாகித் தரணியை ஆளுது
தரணியெங்கும் தமிழிசை முழங்கட்டும்
மண்வளக் கலைகளும் மகுடம் சூடட்டும் !
