மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

ரஜனி அன்ரன்

“ மனிதஉரிமை “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 14.12.2023

இனமத நிற பேதமின்றி
சமத்துவத்தோடு கண்ணியமாய் வாழ
இலட்சியத்தோடு உருவானதே மனித உரிமை
ஒருவரின் உரிமையைத் தட்டிப் பறிக்க
யாருக்கும் உரிமை கிடையாது
மனித உரிமை பிறப்பின் உரிமையே !

ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக வாழ
சட்டத்தின் முன் சமனாக நிற்க
உரிமைகள் பறிபோகும்போது
சட்ட உதவியை நாடும் உரிமை
சட்டப்படியான மனித உரிமையே !

பேச எழுத சிந்திக்க
தகவல்களைப் பரிமாற
எல்லைகள் வகுத்திட முடியாது
ஜனநாயகத்தின் அடிநாதம் மனிதஉரிமைகளே
மனித உரிமைகளே மானிடர்க்கு பெருமை !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading