கவிதை நேரம்-05.06.2025 கவி இலக்கம்-2014 தாயுமானவர் –

தமிழில் விடியல் முதல் ஒலி-2095 ஜெயா நடேசன் புலம்பெயர் வாழ்விலே தமிழர் வாழும் நகரத்திலே சரித்திரம் படைத்த...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.12.23
கவிதை இலக்கம் -295
கற்றுத் தந்த பாடம்

சுதந்திரச் சூறாவளியே !
உனக்கு ஏன் எதற்கு
இவ்வளவு ஊமைக் கோபம்

தந்திரமாகும் தட்ப வெப்பம்
தாறுமாறாகத் துரத்தும்
தீராத கொலைவெறித் தாபம்

இருந்த வீடு,காணி,உறவு
சொத்தெல்லாம் பெய்த
மழை வெள்ளத்தில்
அடித்துச் சென்ற பிரளயம்

காத்திருந்த உயிரோடு
ஆடு,மாடு உயிரினங்களும்
கூக்குரலோடு புதை குழியில்
புதைந்ததே

ஏழை,பணக்காரனின்றி
மிக்ஜாம் புயல் எனும்
சுற்றிய சூறாவளி
முறித்துச் சிதைத்ததே

சொட்டுக் காணிக்கு
விட்டுக் கொடுக்காது
அடிதடி சண்டையில்

கோடேறியவர்க்கு
இயற்கை கற்றுத்
தந்த பாடமாகுமோ ?

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading