04
Sep
ஜெயம்
அறிவின் சிகரத்தின் உச்சியை தொடவைத்தார்
நெறிமுறை கலந்த வாழ்க்கைக்கு வித்திட்டார்
ஏணியாய்...
04
Sep
நன்றியாய் என்றுமே……
நன்றியாய் என்றுமே........ரஜனி அன்ரன் (B.A) 04.09.2025
நன்றியென்ற ஒற்றை வார்த்தை
உள்ளத்தோடும் உணர்வோடும்...
04
Sep
நன்றியாய் என்றுமே!
நகுலா சிவநாதன்
நன்றியாய் என்றுமே!
பெரும் செல்வம் கல்விதனை
பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம்
அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை
அன்போடு...
ழகரமும் தமிழும்
ரஜனி அன்ரன்
“ ழகரமும் தமிழும் “ கவி…..ரஜனி அன்ரன் (B.A) 30.01.2025
தமிழுக்கு முதலாம் அகரம்
தமிழென்ற அமிழ்திற்கு சிறப்பாம் ழகரம்
குழைந்து வரும் ழகரம்
தமிழுக்கு அதிமதுரம்
பலரது வாயில் இது நுழைவது கடினம்
நுழைந்து விட்டால் அது அமிழ்தம்
அடிக்கடி ழகரத்தை உச்சரித்தால்
கூம்புச் சுரப்பியும் குதூகலிக்குமாம்
உடலுக்கும் உறுதியைத் தருமாம் ழகரம் !
இலக்கணத்தில் இடையெழுத்து
இடையினத்தின் மெய்யெழுத்து ழகரம்
தமிழுக்கு ழகரம் தனிலயம்
அழகு தமிழுக்கும் அழகு சேர்ப்பது ழகரம்
அதுவே தமிழர் எமக்கெல்லாம் மகுடம் !
குழலிலும் யாழிலும் மழலை மொழியிலும் ழகரம்
தழுவிடும் மழையிலும் கொழுகொம்பிலும் ழகரம்
செழித்த செடியிலும் பழுத்த பழத்திலும் ழகரம்
அழகன் திகழன் உழவன் கிழவனென
அழகாய் நாக்கில் குழைந்து வரும் ழகரம் சிறப்பே
அமிழ்தான தமிழுக்கு அணிகலனாம் ழகரம்
அழகு தமிழுக்கு அழகேயழகு ழகரம் !

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...