” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

அகிம்சைக்கு அகவை முப்பத்தியேழு....

ஆழமான கருவோடு ஆயுத்தின் வலுவோடு
போராடும் தேசத்தின் புதுப்பாதை பயணிக்க
உயிரான தியாகத்தை உருக்குலைந்திடும் வாழ்வினை
அகிம்சையின் நெறியாக்கி அறப்போரின் வலுவாக்கி
பயணித்த வீரனே பாறை சாற்றிய தோழனே

மரணித்து ஆண்டுகள் முப்பத்தியேழா
மறுக்கிறது மனது நினைக்கிறது நினைவு
நேற்று நீ எம்மோடு நல்லூரின் வீதியில்
ஈர் ஆறு தினங்கள் இருந்ததாய் உணர்வோடு
ஈழத்தின் மீட்பிற்காய் வேரான வேங்கையே

அடிமை வாழ்வும் அந்நியப் படையும்
அகற்றிட வேண்டியே அறைகூவல் விடுத்தாய்
ஐந்தம்சக் கோரிக்கை எமக்கெனத் தொடுத்தாய்
உயிரையே எமக்கெனத் தியாகமாய் எரித்தாய்

உண்ணா நோன்பாலே உலகையே அழைத்தாய்
விடுதலை வேட்கையே வெற்றியாய் கொண்டாய்
அறப்போரின் வழியிலே அகிம்சையை வென்றாய்
அண்ணல்தீலிபனே,
வீரத்தின் முழக்கம் விண்ணெங்கும் அதிர
காலத்தை வென்றிட்ட காவிய மைந்தா
ஆண்டுகள் முப்பத்தியேழு அகிம்சையின் தியாகமே
ஈழத்தின் இதயமாய் துடிக்குது நினைவு
நல்லூர் முன்றலில் ஈராறு பொழுது.ஈகையின்வேரே ஈழத்தின் வரமே.

Nada Mohan
Author: Nada Mohan