மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பண்டிகை வந்தாலே .....

பண்டிகை வந்தாலே…
மனதிலே மகிழ்ச்சி பொங்கும்
மறக்காத நினைவிலே நீந்தும்
பலகார வகைகள் வாசம்
பண்டிகைக் கோலமாகும்
தீபத்தின் ஒளியில் வீடே
திசையெங்கும் வெளிச்சமாகும்

காலத்தின் சுழற்ச்சி மாற்றம்
ஞாலத்தில் வெவ்வேறாகும்
விழாக்களின் கோலம் மாறும்
வெவ்வேறு நிகழ்வு சேரும்
பல்லின மக்கள் கூட்டில்
பறவையாய் நாமும் கூடி
எம்மின விழாவின் மகிழ்வை
ஏற்றங்கள் செப்ப வாழ்வோம்
போற்றும் நம் விழுமியத்தை
புகட்டும் நம் விழாவின் காப்பை
ஏற்றிட வாழ்தலே முறைமையாகும்

பண்டிகைப் பண்பும் மொழிக்கு
பலவகை சரிதம் செப்பும்
ஒற்றுமை வேரை ஊன்றும்
விருந்தோம்பல் பண்பில் ஒன்றி
வேற்றுமை விலத்தி நிற்கும்
வாழ்த்துக்கள் கூறி அன்பை
மனதிடை மகிழ்ச்சி நிறைக்கும்
புத்தாடை அணிந்து கூடி
புதுமைக்குள் நிறையும் ஆற்றல்
விழாக்களின் விந்தையாகும்
வித விதமாய் விழாக்கள் மாறும்.

நன்றி
அனைவருக்கும் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

பட்டா

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading