வரமென வந்தனள்

இரா.விஜயகௌரி
மீண்டும் பிறந்தது போல் பேருவகை
மிடுக்காய் பேசியெழும் மணித்துளிகள்
சேயாய் மாறியிழை சிறு பருவம்
செல்லச் சிணுங்கலுள்ளே பல கதைகள்

விழிகள் பேசும்மொழி வியந்தெழுத
விளையாடும் கை கால்கள் ஜதி இழைய
குமிண் சிரிப்பில் கொள்ளையிடும் பேரழகி
இவள் குல விளக்காம் நம் அகத்து ஒளிச்சுடரே

ஆறே வாரங்கள் ஆகி விட்ட பருவம்
அழகாய முகம் பார்த்து புன்னகைக்கும் அதரம்
பேச எடுக்கும் தொனி பேசாமல் அகம் பேச
அதிசயங்கள் பல எழுதும்அற்புத்த்து குழவி இவள்

சேயாய் ரசித்ததில்லை அவசரத்தில் வாழ்க்கை
பாட்டி கொஞ்சி மகிழ் பரவசத்தில் ஊற்று
கையுள் கரைந்திழையும்கனிரசமாம் சேவை
கட்டி முத்தமிட்டு வரமென்போம்

Author: