வருகை உனது..

சிவதர்சனி இரா
வியாழன் கவி 2199..
வருகையோ உனது..!!

இதற்கையின் அழகியல் கண்டு
இதயமும் நெகிழ்வதும் உண்டு
இறைவனின் ஆணையோ என்று
நிறைவது கொள்வது மனசு…

தேனென இனிக்கும் ஓர் குரல்
தென்றலின் இயல்பினைத் தந்து
ஈர்ப்பது விழிகளில் பூண்டு
இன்னுமாய் தொடர்வது மகிழ்வு..

அன்பெனும் ஆயுதம் தாங்கி
அனுதினம் இழைத்திடும் நூலால்
அகத்தினைக் கட்டுதல் நியாயமோ
ஆதவன் ஒளியெனத் தோன்றுதோ..
சிவதர்சனி இராகவன்
28/8/2025

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading