“வாணியின் வளாகம் “

சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்_203

“வாணியின்
வளாகம்”

வீட்டில் ஒரு குயில்
வளாகத்தில்
பல குயில்கள் கச்சேரியும்
ஒலியும் ஒளியும்
சத்தத்துடன்
யுத்தம்!

நான்கு சுவருக்குள்
ஆடலும்
பாடலும்
கூடலுக்குள்
கொண்டாட்டம் திக்கு திசை எங்கும் பரவிட!

உலகத்தை சுற்றி வரும்
ஆளில்லா விமானங்கள் ஆற்றலை வெளிப்படுத்த போற்றலும்
காற்றில் கலந்திட!

வாழை தோப்பு
தென்றல் காற்று
மக்கள் நடமாடும்
நிறை வளாகம் வாணி அக்கா
வளாகம்!

நன்றி
வணக்கம்
21.09.25

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading