ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

“விசித்திரம்”

நேவிஸ் பிலிப் கவி இல (448)

துளையிடா மூங்கில்
புல்லாங்குழலாகிடுமோ
உளி படா கற்களும் தான்
சிற்பங்களாகிடுமா.?

பட்டுப் புழுக்களும்
பட்டாம் பூச்சிகளும்
படுகின்ற துன்பங்களும்
உருப் பெறும் அழகும்
விசித்திரமே!!!

சுடச் சுடத் தங்கம்
ஒளிர்வது போல்
தேயத் தேய சந்தணம்
மணப்பது போல்

துன்பக் கடலிடை துடுப்பில்லா
படகோட்டும் எளியோர் நாம்
இறக்கமில்லா ஏற்றம்தான் காண்போமோ?

விசித்திரக் கலவையாம் வாழ்க்கையிலே
துன்பமின்றி இன்பமில்லை
அழிவின்றி உயர்ர்வில்லை -ஆனாலும்
பட்டறிவால் இன்பம்வரும் நிட்சயமே.
நன்றி,,,,,,

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading