விசைத்தறி இவளோ……….

இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை அழகாய் படைப்பாய் தரிசனம்

ஆம் பாமுகத்தளத்தின் விசைத்தறி இவளோ
பழகிட இனிதாம் மகளாய் இவளோ
சொற்போர் தொடுத்திடும் நடாமோகனார் துணையாய்
வழித்தடம் பேணிடும் வாய்மொழி இவளோ

இளையவர் பெரியோர் இனிதென் இழைய
கணமும் கனிவுடன் தன்கடமைகள் ஒதுக்கி
வாழ்வியல் தொடரில் மொழியின் தொடுகை
திறனாய் மிளிர கை கொடுப்பவள் இவள்தாம்

வாணியின் பணியினை நிதமும் ஏற்றோம்
பொருள் நிறை உறுதுணை அழகாய் கண்டோம்
நித்தமும் மகிழ்வாய்நீடு நிறைவாய் வாழிய
வாழிய மகளே

Author:

வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

Continue reading