விடியாத இரவொன்று

விடியாத இரவொன்று

கலையாத நினைவு கரைகாணமுடியாத கொள்கை
சளையாத நெஞ்சம் சுளையான எண்ணம்
புலராத பொழுதும் இன்பமில்லாத இரவும்
பூகம்பம் வாழ்வினிலே புரட்சியாய் மேவிநின்றிட

ஆதங்கம் தெரியாமல் அவலங்கள் என்றுமே

மேளங்கள் கொட்டாமல் மழையும் பொழிந்திட
தாளங்கள் இல்லாமல் தம்பட்டம் அடித்திட
கோலங்கள் குலையாமல் குமரிப் பெண்ணிருந்தாள்
பாலங்கள் போட்டனர் பாதையை மூடினர்
சாபங்கள் போட்டதால் சாகித்தியம் அழிந்தது

சோகமும் கூடின சோலைக்குயில் அடங்கியது

மணமேடைகான மகிழ்வுடன் இருந்தவேளை
பிணமேடையில் மாப்பிளை கொலுவிருந்தான் நேற்று
விடியாத இரவினிலே விழித்திருந்தாள் பேதை

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan