விடியாத இரவொன்று

விடியாத இரவொன்று

விடியாத இரவொன்று விடைதேடி நிற்கிறது
முடியாத செயலதனை முடித்திடவே செய்கிறது
படியாத கல்வியினால் பயன்கூட இல்லையே
நடியாத நல்வாழ்வின் நல்லொளியும் பெருகிடுமே!

கடிகாரம் ஓடுகையில் காலமும் ஓடிடுமே
கண்போல காரியமும் கவனத்துடன் முடிந்திடுமே!
துடிப்போடு முயற்சியும் துளிர்விடுமே நாளை
தூண்டலுடன் முயல்வும் செய்திடும் வேளையிலே

விடியாத இரவென்று ஏதுமில்லை
விண்ணதிர ஒளியுமே தெரிந்திடும்
முடியாத முயற்சியும் முயன்றிட்டால்
முன்னேற்றம் துளிர்விடும் விடியலாய்

நகுலா சிவநாதன் 1753

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading