விடியாத இரவொன்று 14.03.2024

விடியாத இரவொன்று (606)

தள்ளாத வயதினிலே தளராத மனதோடு
தட்டுத் தடுமாறும் தடியோடு நடமாட்டம்
தக்கசமயம் வந்தாலே தன்னாலே பயமாகும்
தங்க வழியின்றி கண்ணீரும் தாரையாகும்

மூத்தோர் வாழ்ந்திட்ட சரிதம் ஒன்று
வரலாறாய் கிடைத்திட்ட பொக்கிஷம் நன்று
முன்பின் முரணாய் முனகும் இன்று
முழுதாய் முடங்கிடா முதுமை ஏக்கமாகும்

மூத்தோர் சொல்லின் வார்த்தை அமுதம்
முழுமதி நிலவின் ஒளிர்வின் சரிதம்
மூச்சுப் பேச்சாய் இணைவின் சிறப்பும்
முதுமைகூட தனித்து விடாத பொறுப்பாகும்

விடியாத இரவொன்று விடியலைத் தேடியே
முடியாத போதும் முடியுமே உன்னாலே

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading