விடுமுறை விருப்பு

வியாழன் கவி 2179!!

விடுமுறை விருப்பு..

விடுமுறை அதை அனுபவிக்கத்
தடை இல்லை ஏது விதிமுறை
நடைமுறை நல் உடல் நிலை
இணைத்திடும் நெடு பயணத்தினை..

சிற்றுந்து பேருந்து சிதறாமுத்தாக முனைப்பாக நேர் வழி ஓடு
விண்ணுந்து நீ முந்து பயணச்
சீட்டு பல அக்கப்பாடு..

உழைப்பில் மீந்தது பாதி
ஒதுக்கி வைப்பது மீதி
மிச்சப் பிடிப்பில் ஒரு பகுதி
பயணப்பாடுகளுக்கு உதவும் பாரு..

கல் மண் கடல் வானம் என்றே
காட்சிப் படித்தல் கால கணக்கு
கோடை வெயில் தரு மகிழ்வு
கொடை என மிரளுது மனது..
சிவதர்சனி இரகவன்
10/8/2025

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading