வீழ்ந்த போதும் வாழ்ந்து காட்டு

சிவதர்சனி இராகவன் வீழ்ந்த போதும்
வாழ்ந்து காட்டு …!
வீழ்வதால் பெருமை
கொள்ளும் நீர்விழ்ச்சி
வீழ்ந்தது என்று
கனிகள் வருந்துமோ
விழுந்தால் மண்ணில்
உரமாகும் இலையும்
விழுவது தவறல்ல
வாழ்ந்துகாட்டுதல்
வரமாகும் !
கடலில் விழும்
மழைத்துளி பாரும்
முத்தாகி ஒளிரும்
அதிசயம் ஆகும்
போரும் வெற்றியும்
வீழ்ச்சியின்றி
சாத்தியமா
வீழ்ந்தபோதும்
நீ வாழ்ந்து
காட்டு …!!!!
###சிவதர்சினி ராகவன்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading