“வேள்வி”

நேவிஸ் பிலிப்
கவி இல (456)
புரட்சி தீ 🔥 பொறியாகி
நாளைய தலை முறைக்கு
வரவேற்பு கவி பாட
விதை கோதி நிலம் தூவி
உரமேற நிதம் கூவி
வளர்த்த செடிகள்,
புது நாற்றாய் வளர்ந்து
வளைந்து நிலம் முட்ட
சிறுமையை பெருமையாக்கி
வளைந்ததை நேராக்கி
வரட்சியை வசந்தமாக்கிய
பசுமைப் புரட்சி
தள்ளி நில்லாது ,துள்ளி எழுந்து
தன்னம்பிக்கை கேடயமாய்
தளராது செய்த பணி,
அர்ப்பணிப்பில் நிறைந்த
தியாகத்தை போற்றுவோம்,
கலைகள் வளர ,ஒழுக்கம் சிறக்க
புதியதோர் சமுதாயம் படைக்கும்
இது ஒர் ஆலயம் ,எங்கள் பாமுகம்,
ஐநூறுகள் தொட்டு விட்ட
பொன் மாலைப் பொழுதினிலே
வெற்றிக் கனிகள் கிட்டட்டும்
காண்போர் கைகள் தட்டட்டும்
விழா களை கட்டட்டும்.

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading