வையமே வசமாகுமே…

வசந்தா ஜெகதீசன்
முச்சக்தி முழுமதியாய்
முயற்சிகளின் பெரும்நிதியாய்
வையமே வசப்படுது
வணங்குதலில் வளப்படுது
ஓன்பது ராத்திரிகள்
ஓங்கார சக்தி வசம்
வீரமாய் செல்வமாய்
வினைத்திறனில் கல்வியாய்
ஆளுகின்ற உலகிற்கு
அருள் நிறைக்கும் வழிபாடு
பத்தாம் நாள் வரமாகும் பலநிகழ்வு
மானம்பூ வாழைவெட்டு
ஏடு தொடக்கலென எண்ணற்ற
புது நிகழ்வு
ஆரம்பிக்கும் அற்புதமும்
சக்திகளைத் துணையாக்கி
சான்றுரைகளை விளைவாக்கி
பக்தியின் பரவசத்தை
பணிகின்ற வரலாறு
பாலகரும் அறிகின்ற
பக்தியின் முதலீடு
ஏடு தொடக்கலெனும்
வித்தியாரம்பம் விஜியதசமியிலே விளக்காய் ஒளியேற்றும் விளங்கும் பலதுறைக்கு துலங்கும் தூரிகையாய் “அ”எழுத்திட்டு
அத்திவாரமிட்டு வையத்தை வசமாக்குமே!
நன்றி

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading