10.09.2026 தனிமை 2061 ஜெயா நடேசன்

தனிமை இனிமை என்றாலும்
சுகமான நேரமதில் சுதந்திரமே
தனிமை கொடுமையில்லை
தவறான மனிதர்களிடம் சிக்கின்
இருப்பது உண்மையான கொடுமை
சில நேரமதில் தனிமை வருவதுண்டு
தனியாக அழவேண்டி வரும்
தனியாக நடக்க வேண்டி வரும்
தனிமையில் போராட்டமும் ஏற்படும்
துன்பத்தை அனுபவிப்பதில் கவலை
இன்பத்தில் தைரியமாக இருப்பது
தனிமை எனும் அரும் பெரும் கொடையே
தனிமை மனிதனுக்கு சாபம் என நினைக்காமல்
நிதானமாக பயன் படுத்தினால் வெற்றியே
மற்றவர்களை சார்ந்து வாழ்வதிலும் பார்க்க
தனிமையை அனுபவித்து வாழ்வது வரமே

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading