சிவரூபன் சர்வேஸ்வரி

பொங்கலோ பொங்கல் >>>>>>>>>>>>[[[【[>>>>>[>[ தையும் பிறந்துவிட்டால் பொங்கலும் செய்திடுவார் தைமகளையும் வரவேற்று தரனியை சிறக்கவைப்பார் உழவர் திருநாளாம்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

நிறுத்தத்தின் நிர்க்கதியில்…
உற்பத்தி உரத்திலே தரணியே தளிர்க்கும்
உணவாகி பலவாகி உயிர்களே செழிக்கும்
விடை காண வேண்டியே வேலை நிறுத்தங்கள் காணும்
விளைவற்றுப் போனாலே விபரீதம் ஆகும்
தொடரான வாழ்விற்கு ஆதாரம் உணவு
வறுமையைப் போக்கிடும் வருமானச் செறிவு
எதிலுமே விலையேற்றம் திண்டாடும் தொழில்கள்
எடுத்துரைத்து வலியுறுத்த
எதிர்ப்பாட்ட முனைகள்

ஏற்றத்தால் முடங்கிய எம்வாழ்வு முறைகள்
ஏதுவழி எற்றமுற வாழ நிலை செப்பீர்
ஆதாரம் நாமானோம் அகிலமே வாழ
விவசாயம் நாம் செய்தால் விளைச்சலே விருத்தி
விலை உயர்வால் விக்கித்தோம்
விடை தாரீர் அரசே
நிலைகுலையும் வாழ்விற்கு நிர்க்கதியே உறவு
நிவர்த்திக்க வழிகூறின் நிமிர்ந்தெழுவோம் நாமும்
இயலாது எமக்கினியும் ஈடுகொடுத்து இழுக்க
இயல்பான மனித இனம் இடர்நிலையைத் தவிர்க்க

விவசாயம் விருத்திபெற
தொழில்த்துறைகள் துலங்கும்
வேலைப்பளு விவசாயப்பளு
ஓங்கியே உயர
தடை நீக்கி தலைநிமிர தக்கபதில் தாரீர்
தன்னம்பிக்கை உற்பத்தியாய்
தளைத்தோங்கும் பாரீர்!

நன்றி மிக்க நன்றி

Continue reading