ஏங்கும் என் இதயம்

Vajeetha Mohamed

ஏங்கும் என் இதயம்

துயர்மிகு நெஞ்சுடன்
தூக்கத்திலும் துடிக்கின்றேன்

பகுத்தறிவும் பண்பும்
பாரினில் குறையும் அன்பும்

பொய்யாகிப் போகும் ௨லகத்தில்
வதைப்பும் சிதைப்பும் ௨யரத்தில்

௨திரம் ௨றையும் நிகழ்வுகள்
௨ணர்வில்லா மனிதங்கள்

கண்ணீரோடு கையேந்தும்
கைவிடப்பட்ட முனங்கலோடும்

போரின் நடுவே நசிபடும்
குழந்தைகள் பெண்கள்

பசிசுரந்தும் ௨ணவின்றி
பாதியாப்போன ௨டலோடும்
ஓடித்திரியும் ஜீவன்கள்

இன்னும் இந்தக் கொடுமை
இரக்கமில்லாத் தொடர்மை

குண்டுச் சத்த ஒலியில்
கு௫தி வடியும் வெளியில்

எனிதயம் வெடித்து ச௫காய்
விழிநீர் அணைப்பாலே

௨யிர்தேய்ந்து அழுகின்றேன்
௨ய௫ம் கரமாய் பிராத்தனை
புரிகி்றேன்

பலஸ்தீன் இஸ்ரேல் போரினை
திறுத்திவிடு இறைவா
ஆமீன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading