ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

சிவா சிவதர்சன்

வாரம் 154
“சின்னத்தம்பி ஆசிரியர்”

சின்னத்தம்பி ஆசிரியர் சிறந்ததொரு ஆசிரியர்
ஊர்மக்கள் போற்றும் உத்தம ஆசிரியர்
ஒழுக்கம்,பக்தி,சுத்தம் என்பவற்றில் முன்னணியில் நிற்பவர்
வேட்டி சால்வை சட்டையில் சிறப்பாய் உலா வருபவர்
கற்கும் மாணவச் செல்வங்கள் தம் சொந்தமென நினைப்பவர்
பாடசாலை செல்வதிலும் நேரம் முந்நதிச்செல்பவர்
தீய பழக்கம் எதுவுமிலா சீரிய குணங்கொண்டவர்
ஊரார் அவரைப் போற்றுவர் மாணவர் மனதிலும் நிறைந்தவர்
சமுதாய முன்னேற்றம் ஆசிரியர் கையில் என நினைப்பவர்
வாள் வெட்டும் போதைவஸ்தும் கண்டு மனம் கொதிப்பவர்
தெய்வீக ஆசிரியப் பணியின் தவறே இவையென மனம் நொந்து போனவர்
பிரம்பெடுத்துப் பயனில்லை அன்பினாலிவற்றை மாற்றச் சித்தங் கொண்டவர்
ஊரிற்பல தெய்வங்கள், கோயில் கட்டிக்கும்பிட்டும் பயனில்லை
நாளும் கண்முன் வாழும் தெய்வம் கண்டுகொள்ள மனமில்லை
சின்னத்தம்பி போன்றவரை மனதிலிருத்திப் போற்றிடுவோம்
சமுதாயம் முன்னேற நாடு முன்னேறும் நல்லவர் பணி என்றும் நலம் வாழ நாமும் சேர்ந்து வழ்ந்திடுவோம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading