பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 10-03-2022
ஆக்கம் – 35
உன்னதமே உன்னதமாய்

விசித்திரமான உலகத்தில்
விந்தைமிகு மனிதர்கள்
சிந்தனை தெளிவு பெற்று
உலகிற்கு நல்வழி காட்டியதால்
உன்னத மனிதராய் போற்றப்படுகின்றார்கள்

உலகம் உருண்டை என்று சொன்னவன்
உதைக்கப்பட்டான்
உலகின் நலனுக்கா உழைத்தவர்கள்
பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல
முயற்ச்சிகள் யாவும் நிதர்சனமாகும் வரை

ஆக்கதிற்க்கு ஊக்கம் தந்த அணு – இன்று
உலக அழிவிற்க்கு துணைபோகின்றது
சன்னதம் கொண்டு சதிராடுகின்றது
பயித்தியக்கார உலகம்

இயற்கையின் வழியில்
சிந்தனை மாற்றமும்
புதியதோர் உலகமும்
பிறந்திடல் வேண்டும்
மனித இனம் மனித தினம்
கொண்டாடும் நிலை வரவேண்டும்
உன்னதமானவர்கள் போற்றிப் புகழப்படவேண்டும்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
09-03-2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading