நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

“வேண்டும் வலிமை” – திரேஸ் மரியதாஸ் UK 28/04

“வேண்டும் வலிமை”
– திரேஸ் மரியதாஸ் UK 28/04

கருவிலே போராடி உருக்கொடுத்த
இறைவன் கண்ணுக்கும் காலுக்கும் கைக கைக்கும் வாய்க்கும் வரங்கொடுத்திடு
வரப்பிரசாதமான குருவாய் உலாவர

உடலின் குறைபாடு உள்ளவர்களுக்கு
இல்லைக் கறைகள் உள்ளத்திலென
உலகத்தின் ஒவ்வொரு நாவுகளும்
ஓங்கியொலிக்க திட்டம் தீட்டுவோம் இலண்டனின் பிக்பென்னாய்
இப்பூவுலகுக்கே கேட்க இசையெழுப்பி

மாற்றுத்திறனாளிகளிடம்
கொட்டிக்கிடக்கிறது கோடி
திறமைகள் கோடியெங்கும்
காலில்லாமலே மரதனோடி
ஜெயித்த மாவீரக்குடியால்

அறிவிற்கே பெயர்போன
அல்பேட்ஐன்ஷ்ரன்
தொட்டு கல்வியில் குறைந்தவர்கள்
கொடிகட்டிப்பறக்கும் இவ்வேளை
குறைவுகள் என்று ஒன்றில்லையென
ஒருங்கிணைப்போம் நாமெல்லாம்
உயிரான உறவினரென

யானைக்குத் தும்பிக்கைபோல
உங்கள் மனோபலமே உங்கள்
தும்பிக்கையென நம்பிக்கையை
நாங்கள் நாவில் ஊட்டுவோம்
நாள்தோறும் முடியும் முடியுமென
முடிந்தவரை நல்வார்த்தைகளால்
உயிரோட்டம்பெற

Nada Mohan
Author: Nada Mohan