நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்__74

“விடுமுறை”
விடுமுறையின் வியப்பு
விந்தையான நாட்களிப்பு
வியந்து பார்த்த இடங்கள்
வினாவூட்டும் பதில்கள்

உறவுகள் ஒன்றிணைவு
உணவின் சுவையின் சுவைப்பு
ஒற்றுமையின் பிரதி பலிப்பு
ஓய்ந்து இருந்த நாட்கள்!!

மகிழ்ச்சியான நாட்கள்
மாற்றம் கொண்ட தேடல்
மகவுகளின் கூச்சல்
மறந்து இருந்த இரவுகள்
பகல் இரவு தெரியாமல்
தூக்கம் கலைந்த நாட் கள்!!

சொந்தங்களின் குதுகலம்
இன்னும் சோட்டையாய் இருக்குதே
மணம் வீசும் நாட்கள்
மலர்ந்து மகிழ்ந்த தருணம்!!

நன்றி
வணக்கம்
14.08.22

Nada Mohan
Author: Nada Mohan