சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

சக்தி சக்திதாசன்

கவிதைக்கோர் தினமெனில்
கவிதையிலாத் தினமுண்டோ?
கவிதையோடு விழித்திடுவேன்
கவிதையோடு உறங்கிடுவேன்

கவிதையே வாழ்வாகவே
கண்டிட்ட கவிஞனெங்கள்
காவியத் தலைவனென்போம்
கவிதைக்கோர் பாரதியே !

கவித்துவத்தை தன்னகத்தில்
கணக்காகக் விதைத்திட்டவன்
கவியாக்கிக் களித்திட்டோன்
கவியரசர் கண்ணதாசன்

காசினியில் ஓர்தினமின்று
கவிதைக்கு கொடுத்திட்டார்
கவிதைகளாய் சிந்திக்கும்
கவியலைகள் ஆர்ப்பரிக்கும்

கவிதையாக தாய்த்தமிழதுவே
கவிதையில் தவழ்ந்திடும்
கவிதையில் மலர்ந்திடும்
கவிதையாகவே சுரந்திடும்

கவிதைகள் கனத்திடும்
கவிதைகளாய்ப் பொழிந்திடும்
கவிதைகளே தினந்தினம்
களிப்புடனே கவிந்திடும்

உலகத்தோர் அனைவரும்
உணர்வோடு கொண்டாடும்
உலகக் கவிதைத்தினமதில்
உதிர்க்கின்றேன் வாழ்த்துகளை

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading