அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

இரா விஜகௌரி

வாழ்ந்த சுவடுகள் ………

என் உலக உறவின் மூத்தவள்
உயிர்ப்பின் முழுமூச்சு
தந்தைக்கும். தாயிவள்
அன்னபூரணி பெயருக்கேற்ப பூரணி

வித்தகம் அறியாத வித்தைக்காரி
உறவைப்பின்னியெழும் உரிமைக்காரி
சிறியவள் ஆனால்உலகில் பெரியவள்
புன்னகைக்குற் பூட்டி விடும் காவியமிவள்

சுறுசுறுப்பைத். தனதாக்கிய பெருந்தேனீ
அமுதுக்கும் சுவையூட்டும் சாமர்த்தியம்
கண்டிப்பில் இவளே. ராட்சசி
இன்று நினைத்தால் கனிந்தெழும் ஆழுமை

ஊருக்கே உரிமையை நிலை கொள்வாள்
வெள்ளைப்புடவைக்கு. சொந்தக்காரி
இவள் வகுத்ததே வேதம் நமக்கு
விருப்பு வெறுப்பற்ற பேராத்மா

இன்னமும் உறவுப் பின்னலில் நிலை கொள்வாள்
எனக்குள் நேசம் பரப்பிய பாசக்காரி
எத்தனை சோதனைகள் இவளுக்கு
இறுதி வரை சோர்ந்தெழுதா மாயம் இவள்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading