கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் கவிதை
சுடர்
சுடர்விட்டு எரியும் மெழுகு திரி
மெழுகு தான்உருகி
மற்றவர்க்கு ஒளிதரும்
சுடரை போன்ற மனிதர் தன்னையிழந்து
மக்களுக்கு உதவி செய்து மகிமை பெறுவர்
பாரதியின் கவிச்சுடர் பார்முழுதும்
பரவிநிற்கிறதே
பாரதிதாசனின் வேட்கை நிறைகவி சுடராகிறதே
சுடரெல்லாம் சுடர்விட்டு பிரகாசிக்கும் உலகில்
சுட்ர்தந்து தம்மையே
உருக்கி விட்டார்
என்தந்தையே் சுடராக இருந்து எம்மை
சுடர்விட்டு பிரகாசிக்க தன்னை இழந்து
தன்னையே தந்தவர் தரணியில் இன்றில்லை
தன்பிள்ளை இன்று தலைநிமிர்ந்து நிற்கிறார் சுடராய்
என்வாழ்வில் சுடராக இருந்தவர் இப்போதில்லை
என்மனதில் ஒளிருகின்றார் எப்பவுமே சுடராக
சுடர்தான் அணைந்தாலும்
சுடர்விடும் நினைவு
எக்கணமும் என்முன்னே நிழலாக
ஊசலாடியே
கெங்கா ஸ்ரான்லி
10.4.23

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading