ரஜனி அன்ரன்

“ பூமித்தாய் “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 20.04.2023

அழகான ஒரு கோளம்
அடுக்குகள் கொண்ட மாடம்
அடைக்கலம் தந்த கூடம்
அதிசயங்கள் நிறைந்த தடாகம்
ஆதவனைச் சுற்றிவரும் ஆரணங்கு – இவள்
ஆதியாய் உதித்த அன்னை பூமித்தாயே !

இறைவன் அளித்த வரம்
இயற்கை தந்த பொக்கிஷம்
உலகையே சுமக்கும் தாய்மடி
உன்னதமான பூமித் தாய்மடி
பூமித்தாய்க்கென ஓர் தினத்தை
முத்தாப்பாய் தந்ததே ஐ.நா மன்றும்
சித்திரைத் திங்கள் இருபத்தியிரண்டினை !

எழில் மிகுந்து சோலைகள் மலர்ந்து
எண்ணற்ற வளங்களை அள்ளித் தந்து
எண்ணூறு கோடி மக்களையும்
எண்ணில்லா ஜீவராசிகளையும்
கண்போல காத்து தன்மடியினில் சுமந்து
உயிர்வாழ வைக்கும் உத்தமியை
உரமான வரமாகக் கிடைத்த பூமித்தாயை
உணர்வோடு வளம் சேர்ப்போம் என்றும் !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading