ஜெயம் தங்கராஜா

சசிச

ஆற்றல்

உன்மீது உனக்கு நம்பிக்கை வேண்டும்
என்றுவிட்டால் கால்கள் தடைகளைத் தாண்டும்
எண்ணற்ற ஆற்றல்கள் உனக்குள்ளே
உண்டு
கொண்டுவா அவற்றை எவையெனக் கண்டு

பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்
இறப்பிற்குப் பின்னரும் சரித்திரமாகத் தொடரலாம்
இயலாத காரியம் எதுவுமே இல்லை
முயன்றால் வசப்படும் வானத்தின் எல்லை

ஒவ்வொருவருக்குள்ளும் திறமைகள் கொட்டிக்கிடங்கின்றன அறிந்துவிடு
அவ்வளவு சக்தியையும் சாதனையாய் புரிந்துவிடு
வளர்ச்சியும் வீழ்ச்சியும் வாழ்க்கையின் நிகழ்ச்சி
தளர்ச்சியிலும் இழந்து விடக்கூடாது மகிழ்ச்சி

எப்படி வேண்டுமானாலும் வாழ்க்கை மாறலாம்
தப்பிக்க விடாதே பாதையை மூடலாம்
சோர்வடைந்து ஒருபோதும் திறனதனை  குறைக்காதே
சேர்த்துக்கொண்ட அனுபவங்கள் கைகொடுக்கும் மறவாதே

ஜெயம்
19-04-2023

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading