தேவன் திரு

எத்தனை எத்தனை ஆற்றல்களை!
எம்தலைவன் படைத்து நின்றான்
அத்தனை ஆற்றல்களும் மொத்தமாய்
மொளனித்தபடி கிடக்க
எவன் எவனே கைகள் ஓங்கி
எம் இனத்தின்
அழிவிற்கான ஆற்றல்கள்
வளர்த்துக்கொண்டே போகிறது.

கடந்தகாலங்களை
கட்டுப்பாடாய் கண்ணியமாய்
கடந்த எங்களுக்கு
இன்று நடக்கும் அவலங்கள்
ஆன்மாவையே உலுப்புகின்றது.

கொலைகளுக்குள்ளும்
கொள்ளைகளுக்குள்ளும்
நிறைந்து கொண்ட ஈழமதில்
நிறைந்த போதையில்
விறைப்பாகி போன உணர்வுகளால்
உறையவைக்கும் சம்பவங்கள்
தினம் தினம் அரங்கேறுகின்றது.

எமை காக்கும் ஆற்றலோடு
எவருமில்லையே இன்று
வலிகளோடு எம்மினம்
நாளும் நலிந்தே போகிறது
இதில் எமக்கான ஆற்றல்களை
நாம் எங்கே வளர்த்து
வாழ்வில் உயர்ந்திட

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading